2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

Editorial   / 2023 ஜனவரி 15 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}



அரச தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இன்று (15) காலை யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாராதிபதி வணக்கத்துக்குரிய மீகஹஜந்துரே சிரிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி, அவரின் உடல் நலன் குறித்தும் கேட்டறிந்ததோடு சிறிது நேரம் அவருடன் உரையாற்றினார்.அதனை தொடர்ந்து நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரால் செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.

“பௌத்த இந்து சமய மன்றம்” சார்பில் ஜனாதிபதியை அதன் தலைவர் கலாநிதி எம்.மோகன் வரவேற்றார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.

அடுத்து யாழ் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி , யாழ்.ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .