2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மதுபானங்களின் விலைகளும் உயர்ந்தன

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபானம் லீற்றர் ஒன்றின் விலை 1,595 ரூபாய் முதல் 1,850 ரூபாய் வரையிலும் 255 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற வெளிநாட்டு ஸ்பிரிட் லீற்றர் ஒன்றின் விலை 1,860 ரூபாய் முதல் 2,030 ரூபாய் வரையிலும் 170 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக 5 சதவீதம் செறிவு குறைந்த பியர் 190 ரூபாவிலிருந்து 160 ரூபாய் வரை போத்தலொன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

5 சதவீதத்துக்கு கூடிய பியர் லீற்றர் 245 ரூபாய் முதல் 315 ரூபாய் வரை 70 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புகள் கடந்த 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X