2026 மே 02, சனிக்கிழமை

மது பிரியர்களால் தொற்று வீரியமாகும்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக் காலத்தில் சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

மதுபானம் அருந்திவிட்டு பொறுப்பற்ற விதத்தில் ஆங்காங்கே சுற்றித்திரியும் நபர்களாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பண்டிகைக் காலங்களில் நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 65-70 சதவீதமாகக் காணப்படும் அதேவேளை, மதுபானசாலைகளை தொடர்ச்சியாக திறந்து வைப்பதன் ஊடாக ஏற்படும் ஆபத்து காரணமாக, 2021ஆம் ஆண்டு, தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .