2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் லுங்கி, பனியனோடு வந்த தலைமை ஆசிரியர்

Editorial   / 2023 ஜூலை 14 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலையின்  தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குள் மதுபோதையில் ஆட்டம் போட்டு ரகளை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் ஒன்று பீகார். இங்கு மதுவிலக்கு அமலில் உள்ளதால் அடிக்கடி கள்ளசாராய மரணங்கள் நிகழ்கின்றன. இப்படி மதுவிலக்கு கெடுபிடியாக உள்ள பீகாரில் ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியர் செய்த பகீர் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாநிலத்தின் முசாபர்பூரில் உள்ள பஹர்பூரில் உள்ள நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் உமேஷ் தாகூர். இவர் வியாழக்கிழமை (13) காலை பள்ளிக்கு லுங்கி பனியனுடன் வருகை தந்துள்ளார். இப்படி ஒரு கோலத்தில் தலைமை ஆசிரியர் வந்ததை பார்த்து ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தீவிர மதுபோதையில் இருந்த ஆசிரியர் உமேஷ் வகுப்பறைக்குள் பாட்டுப்பாடியும், நடனமாடியும் கூத்தும் ரகளையுமாக இருந்துள்ளார். அத்தோடு நிற்காமல் பள்ளியில் இருந்த பெண் ஆசிரியைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டு அட்டூழியம் செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X