Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 27 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொட நகரில் கடந்த 13ஆம் திகதி இரவு இடம்பெற்ற, வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்கள், வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவு இன்று மினுவாங்கொட நீதவான் நீதிபதி கேசர சீ. ஏ. சமரதிவாகரவால் குடிவரவு- குடியகல்வு திணைக்கள நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த உள்ளிட்ட மூவருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், நம்பிக்கைக்குரிய நபர்களின் தகவல்கள், பாதுகாப்பு கமெரா ஆகியவற்றைப் பயன்படுத்தி, பொலிஸ் விசேட குழுக்கள் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 15 சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
ஹீனடியாவ, தம்மாலோகம, கலஹுகொட, மஹகம, குருகம, பொல்வத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 சந்தேகநபர்களே கைதுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வன்முறைத் தொடர்பில், 17 சந்தேகநபர்கள் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago