2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மதுஷின் துப்பாக்கிதாரி வீட்டிலிருந்து இராணுவ ஆடைகள், துப்பாக்கி ​ரவைகள் மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் பிரபல பாதாளக் குழு தலைவரான மாக்கந்துர மதுஷின் பிரதான துப்பாக்கிதாரியின் கம்புறுப்பிட்டிய வீட்டிலிருந்து இராணுவ சீருடைகள், டி.56 ரக துப்பாக்கி ரவைகள் 21 உள்ளிட்ட உபகரணங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மாத்தறை தொகுதி குற்றவிசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் ஒருவரின் வீட்​டிலிருந்தே குறித்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பன்னிப்பிட்டிய பிரதேச வீடொன்றிலிருந்த 7000 மில்லியன்  ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல்  கொள்ளை சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட கைவிலங்கினையும் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரின் 53 வயடைய தந்தை குறித்த வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .