2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘மதுஷை இலங்கைக்கு அழைத்து வர இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட பாதாளக் குழுவின் தலைவரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்தார்.

இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கலந்துரையாடலையடுத்து, சந்தேகநபர்களை நாட்டுக்கு எப்போது அழைத்து வருவதெனத் தீர்மானிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், பாதுகப்பு அமைச்சின் தலையீட்டுடன் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .