Nirosh / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிடைக்கும் வருமானங்கள் போதியளவானதாக இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க் கட்சி எம்.பி புத்திக பத்திரண, மத்தள விமான நிலையத்திலிருந்து கிடைக்கும் வருமானம், அந்த விமான நிலையத்தின் ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்குவதற்குக் கூடப் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையிலான நேற்றைய (07) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல விடைக்கான வினாவை எழுப்பி உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட நிதி, எங்கிருந்துப் பெற்றுக்கொள்ளப்பட்டது உள்ளிட்ட வினாக்களையும் அவர் சுற்றுலாத்துறை அமைச்சரிடம் வினவியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மத்தள சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 247.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாகவும், சீன வங்கியிடமிருந்து 190 மில்லியன் டொலர்களையும், இலங்கை விமான சேவைகள் தனியார் நிறுவனத்திடமிருந்தும் கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியிலிருந்துமே இந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் இந்த விமான நிலையத்துக்குள் எந்தவிதமான விமானங்களையும் அனுமதிக்கவில்லை எனவும், விமான நிலையத்தின் பொருள்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுச் சென்றதாகவும் தெரிவித்ததோடு, புதிய அரசாங்கம் ஆட்சிக்குப் வந்ததன் பின்னர் இந்த விமான நிலையத்துக்கு அதிகமான விமானங்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
13 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago