2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மத்துகமையில் மூவருக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 என் ஜெயரட்னம்

மத்துகம நகரை அண்மித்த பகுதிகளில் மூவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வலலாவிட்ட பொது சுகாதார அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  யட்டதொல- பதுகமை தனியார் பஸ் வண்டியின் சாரதி  ஒருவருக்கும் அதன்   நடத்துனருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதேவேளை, மத்துகம- பெலவத்தை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், இப் பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

           

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .