Editorial / 2021 மே 29 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
வாடகைக்கு வீடொன்றை பெற்று, அதிலிருந்து கொண்டே ஹெரோய்ன்
போதைப்பொருள்களை நீண்ட காலமாக விற்பனைச் செய்துவந்த 8
பேரடங்கிய குழுவொன்று கைதுசெய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் வாடகை வீடொன்றில்
குறித்த குழுவினை சேர்ந்த 8 பேர் , வியாழக்கிழமை(27) மாலை கல்முனை
விசேட பிரிவினாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 27 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர்கள்
என்றும் அனைவரும் திருமணமாகாதவர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து
கண்டறியப்பட்டுள்ளது.
இதன் போது கைத்தொலைபேசி -14 , இரகசியக்கமெரா -1, ஹெரோய்ன், ஐஸ்
போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய பொதிகள் , பொலிஸாரை
மந்திரத்தினால் வசியப்படுத்தும் விபரங்கள் அடங்கிய தாள்கள் மீட்கப்பட்டன.
அதற்கு மேலதிகமாக, வங்கி சிட்டைகள், வங்கி அட்டைகள், குர்ஆன்
பிரதிகள், கணனி விசைப்பலகை, வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், வாகன சாரதி
அனுமதிப்பத்திரங்கள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான
உலகப்படத்தொகுதி, கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட வங்கி
காசோலைகள் , கடிதங்கள் , இலங்கை புகழ் பெற்ற அரசியல் வாதிகளின்
பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்கள் மீட்கப்பட்டனர்.
அதுமட்டுமன்றி சார்ஜ்சர்கள் ,சீசா என்றழைக்கப்படும் போதைப்பொருளை நுகர
பயன்படுத்தும் உபகரணம், மடிகணினி -2 கணனி ,வன்பொருள் -1 , என்பன
மீட்கப்பட்டன.
இதில் கைதான ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுக்காக நீதிமன்ற
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைதாகிய 8 பேரையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்
படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான போதைப்
பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி
உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால்
கல்முனை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பொதுமக்களிடம்
பொலிஸார் கேட்டுள்ளனர்.
இதே வேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இப்பகுதியில்
போதைப்பொருளுடன் பலர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இது தவிர பொலிஸாரின் புகைப்படம் ஒன்றும் மீட்கப்பட்டது. அதிலிருப்பவர்,
ஒரு மந்திரவாதி எனவும் அந்நபரின் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும்
மந்திரம் மூலம் பொலிஸாரை வசியப்படுத்தி கட்டுப்படுத்தும்
செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்றும் அறியமுடிகின்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago