Janu / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்று சேதமடைந்துள்ள நிலையில், அங்கிருந்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் திங்கட்கிழமை (06) அதிகாலை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதன்போது, வடமராட்சி - கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததுடன், மின்னல் தாக்கத்தின் வீரியத்தினால் வீட்டின் சுவர்களில் துளைகள் விழுந்துள்ளன. அத்துடன் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவு நிலைகளும் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். தென்னை மரம் தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள், உடனடியாக செயற்பட்டு தீயை அணைத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மின்னல் தாக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள ஏனைய வீடுகளிலிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட சில மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026