Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 29 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி நடு கூட்டுடன் காடு. இந்த பகுதியைச் சேர்ந்தவர் சிவா (34). இவரது மனைவி லட்சுமி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக லட்சுமி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் செல்வதும், பிறகு சில நாட்கள் கழித்து கணவர் வீட்டுக்கு வருவதுமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு கணவன் - மனைவிக்கு இடையே வழக்கம் போல சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து, மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும், சரமாரியாக அடித்து உதைத்தும் இருக்கிறார் சிவா. இதனால், மனைவி புதுக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு இரண்டு குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அங்கும் சென்ற சிவா மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் பொறுமையிழந்த மனைவி லட்சுமி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, 498 (A) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஜூன் 28) இறுதி விசாரணை நடைபெற்றது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சிவா, மனைவி மீது தாக்குதல் நடத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும், அவர் குற்றவாளி எனவும் நீதிபதி விஜய் ராஜ்குமார் தீர்ப்பளித்தார். தொடர்ந்து, குற்றவாளி சிவாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
2 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
30 Aug 2025