2025 ஜூலை 05, சனிக்கிழமை

மன்னார் மனிதபுதைக்குழி எச்சங்கள்: ’தமிழர்களுக்கு அதிர்ச்சி’

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் பரிசோதனை முடிவுகள், தமிழர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள், காபன் பரிசோதனை மூலம், காலத்தை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்று வருவதாகவும் காபன் பரிசோதனை மூலம், அவை எந்தக் காலத்துக்கு உரியவை என்பதை, உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

எனினும், இதன் முடிவுகள் வெளியிடப்படுகின்றபோது அது, தமிழ்த் தரப்புகளுக்கும் சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும் என்றும் இதற்கு காரணமாக, இலங்கை இராணுவம் இருந்தாலோ  தமிழ் தரப்பிலுள்ள ஏதேனும் ஓர் ஆயுதக்குழு இருந்தாலோ, அவர்களே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .