2026 மே 11, திங்கட்கிழமை

’மன்னிப்புக் கேட்பதற்கு நான் தவறிழைக்கவில்லை’

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்றைய தினம் சந்தித்து விளக்கமளித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மகாநாயக்க தேரர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் தான் கருத்து வெளியிடவில்லை என்பதால் பொதுமன்னிப்பு கேட்பதற்கு அவசியம் காணப்படவில்லை  என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாநாயக்க தேரர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னதாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய  ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அலரி மாளிகைக்கு சென்று பிரதமரை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .