2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மயில் மாளிகை நீச்சல் தடாகத்தில் மண் அகற்றப்பட்டது

George   / 2016 ஜனவரி 29 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள மயில் மாளிகையில் அமைந்துள்ள மூடப்பட்ட நீச்சல் தடாகத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இன்று இடம்பெற்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, இந்த மயில் மாளிகையை மஹிந்த ராஜபக்ஷ தங்குவதற்கு வழங்க லியனகே தயாராகியிருந்த போதும் பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது.

மயில் மாளிகையை மஹிந்தவுக்கு வழங்குவதற்காக அங்கிருந்த நீச்சல் தடாகம் மண் கொண்டு மூடப்பட்டது.

அதனையடுத்து, குறித்த நீச்சல் தடாகத்தில் தங்க கட்டிகள் புதைக்கப்பட்டுள்ளதாக வாய்வழி கதைகள் பரவியிருந்தன.

அதற்கமைய, கொழும்பு குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் முன்னிலையில், குறித்த நீச்சல் தடாகத்தில் மண்ணை அகற்றும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X