2026 மே 02, சனிக்கிழமை

மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

Editorial   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்
 
வீட்டில் மயங்கி விழுந்த குடும்பப்பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்வாறு உயிரிழந்த பெண் அராலி தெற்கு வட்டுக் கோட்டை பகுதியைச் சேர்ந்த மதுசன் பிரபாசினி வயது 29 என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
ஐந்து வருடங்களுக்கு முன் மேற்படி பெண்ணின் கணவர் இறந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் திகதி மேற்படி பெண் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
 
அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .