2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மர்மப்பொருள் வானில் வெடித்து சிதறியது?

Kanagaraj   / 2015 நவம்பர் 13 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் வானிவேயே வெடித்து சிதறிவிட்டதாக இலங்கை கோளரங்கம் அறிவித்துள்ளது.  

காலியிருந்து 65 கடற்மைலுக்கு அப்பால் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட  மர்மப் பொருளின் ஒருபகுதி தங்காலை வான்பரப்பில் தீப்பிழம்பை கக்கி வெடித்து சிதறிவிட்டதாக வானில் விமானத்தில் இருந்து கொண்டு கண்காணிக்கின்ற கல்ப் கண்காணிப்பு குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோளரங்கம் அறிவித்துள்ளது.

அந்த கண்காணிப்பு குழுவினால், ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் இருக்கின்ற விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடித்து சிதறிய மர்மப்பொருளின் சிதைவுகள் கடலில் விழவில்லை என்றும் அந்த கண்காணிப்பு குழுவினர் உறுதிப்படுத்தினர் என்று கோளரங்கம் அறிவித்துள்ளது.

WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு,  இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்து.

அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த மத்தியநிலையம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X