2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'மரக்கறி கடைகளைகூட பாதுகாக்க முடியவில்லை'

ஆர்.மகேஸ்வரி   / 2020 ஜனவரி 22 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு தொடர்பில் பாரிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள நாட்டு மக்களின் நம்பிக்கைகள் இன்று தவிடு பொடியாகியுள்ளதென தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இந்த அரசாங்கத்தால் கிராமங்களிலுள்ள சந்திகளிலிருக்கும் மரக்கறி கடைகளைக் கூட பாதுகாக்க முடியவில்லை என தெரிவித்தார்.

இன்று (22) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரலாற்றில் மத்திய வங்கி பிணைமுறி, இரத்தினக்கற்கள் கொள்ளை ​போன்ற சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றை எல்லாம் விட இன்று மக்கள் வறுமை நிலையை தாங்கிக்கொள்ள முடியாமல் மரக்கறி கடைகளை உடைக்கும் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .