2025 ஜூலை 16, புதன்கிழமை

மரக்கறி, பழவகை விநியோகத்துக்கு ரயில்கள் தயார்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு உள்ளதால், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உள்ளிட்டவையை, ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்வதற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து போக்குவரத்து  அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அத்தியாவசியச் சேவைகள் நடைபெறும் வேளையில், சில வர்த்தகர்கள் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், மக்களுக்கு இலகுவாகவும் சாதாரண விலைக்களுக்கும் மரக்கறிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதற்கும், விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு சாதாரண விலையைப் பெறமுடியாமல் இருப்பதற்கும், போக்குவரத்தில் காணப்படும் சிக்கல்களே காரணமென, அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்​டியுள்ளார்.

எனவே, இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை ரயில் மூலம் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (14) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனவே அரசாங்கம் அத்தியாவசியப் பொருள்களை கொண்டுச் செல்ல ரயில்களை எதிர்பார்க்குமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் ரயில்வே திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ரயில் மூலம் எரிபொருள் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் கொண்டு செல்லப்படுவதைப் போல் ஏனைய உற்பத்தி பொருள்களையும் ரயிலில் கொண்டுச் செல்வது பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .