Editorial / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள், மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
“போதைப்பொருள் ஒழிப்பு” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று (02) பிற்பகல் குருணாகலை சேர் ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கெதிராக, உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது அவர்களது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அல்லது தமது ஆட்சி அதிகாரத்துக்கு இந்த கடத்தல்காரர்களால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்திருப்பதன் காரணத்தினாலாகும் என்றும் இதனை அறிந்துதான் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தான் ஆரம்பித்திருப்பதாகவும் எந்த தடைகள் வந்தாலும் தனது இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் கூறினார்.
போதைப்பொருளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை அதைரியப்படுத்தும் நோக்குடன் தனக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைத்து வருவது அரசியல்வாதிகளால் பலம்பெற்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago