Editorial / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவர், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில், நேற்று (04) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், சிலாபம் வைத்தியசாலையில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, கொரோனா தொற்றுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டார். இப்பெண், மருதானையில் உயிரிழந்த நபரின் மனைவி எனத் தெரியவந்துள்ளது.
புத்தளம் சாஹிரா கண்காணிப்பு நிலையத்தில், தினமும் 10 பேரின் இரத்த மாதிரிகள் சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய, இங்கு சேர்க்கப்பட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சாஹிராவில் மேலும் 85 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், இவர்களில் 78 பேர் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 7 பேர் மருதானையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026