2026 மார்ச் 16, திங்கட்கிழமை

மருமகனின் கத்தி குத்தில் மாமா பலி

Janu   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையாமோட்டை கிலவமடுச்சேனை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை  (30) அன்று கூரிய அயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது பெரும் கைகலப்பாக மாறியதுடன், அதனை சமரசத்திற்கு கொண்டு வர முயற்சி செய்த மாமாவே, மருமகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிழந்துள்ளதாக தெரயவந்துள்ளது.

மதுரங்குளி - கிலவமடுச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தொம்பகஹ பத்திரனகே டைட்டஸ் ரோஹன் பீரிஸ் ( வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, தனது சிறிய மகனின் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற மைத்துனர், அங்கு கடும் வாய்த்தர்க்கத்திலும் , மோதலிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தனது மகனுக்கும், மருமகனுக்கும் இடையே இடம்பெற்றுவந்த சண்டையை விலக்கமுற்பட்ட போது, மருமகன் மறைத்து வைத்திருந்த  கூரிய ஆயுதத்தினால் தனது மகனை குத்திக் காயப்படுத்த முயற்சி செய்த நிலையில், அதனை தடுக்க முற்பட்ட மாமா மீது மருமகன் கூரிய ஆயுதத்தினால் குத்திக் காயப்படுத்தியுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த மாமாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X