2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மற்றுமொரு வழக்கிலும் சக்வித்திக்கு தண்டனை

Kogilavani   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய மனைவிக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னர், அவருடைய பெற்றோரிடமிருந்து களவாக அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சக்வித்தி ரணசிங்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோNது நீதிபதி, ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நிதி மோசடியாளரான சக்வித்தி ரணசிங்க, இரு திருமணம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்கண்டு இரண்டு வருடக் கடூழிய சிறையும் 25,000 ரூபாய் தண்டமும் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

முதலாவது திருமணம் செல்லுபடியானதாக இருக்கையில் இரண்டாவது திருமணம் செய்தாரென சக்வித்தி ரணசிங்க மீது குற்றம் சுமத்தி சட்டமா அதிபரால்  கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

விவாக அத்தாட்சி பத்திர இல. 4866 இன் படி இவர் முதலில் என். சுபாஷினி சில்வா என்பவரை திருமணம் செய்திருந்தார். முதலாவது திருமணத்தை தள்ளுபடி செய்யாமலேயே இவர், 2006ஆம் ஆண்டு குமாரி அநுர்த்திகா என்பவரைத் திருமணம் செய்து 9425 இலக்க அத்தாட்சிப் பத்திரத்தை பெற்றிருந்தார்.

இவர் மீது பிரிவு 362 (பி) இன் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். சக்வித்தி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நபுவசம் இவருக்கு 2 வருட கடூழிய சிறையும் 25,000 ரூபாய் தண்டமும் அன்று விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .