2025 மே 21, புதன்கிழமை

“மீறினால் கடுமையான நடவடிக்கை”

S.Renuka   / 2025 மே 21 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சித் தலைவர்கள் நிலையியற் கட்டளைகளை மீறி கேள்விகளை எழுப்பியுள்ளதால், நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை பின்பற்றப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று புதன்கிழமை (21) அறிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவர்களும் சமீபத்தில் எழுப்பிய சில கேள்விகள் வாய்மொழி கேள்விகள் அல்லது ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகள் வடிவில் எழுப்பப்பட்டிருக்கலாம்.

மேலும், கட்சித் தலைவர்கள் சமீபத்தில் கூடுதல் கேள்விகளை எழுப்புவதன் மூலம் நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளனர். எனவே, நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் உள்ள கேள்விகள் நிலையியற் கட்டளைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்," என்றும் சபாநாயகர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .