2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மறைமுக வரிகளை அறவிட சூழ்ச்சி

Freelancer   / 2022 செப்டெம்பர் 09 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக பாதுகாப்பு வரி என்ற பெயரில் வற் வரியுடன் மேலும் மறைமுக வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் நேற்று (8)  தெரிவித்துள்ளார்.

 மறைமுக வரிகளை நீக்கி நேரடி வரிகளை அறவிடும் நோக்கிலேயே இதனை கொண்டு வருவதாக அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறினாலும், இது மறைமுக வரியாகவே வரவுள்ளது. அத்துடன் இது சமூக பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அரசாங்கத்தின் செலவுகளுக்கு இந்த வரிகள் பயன்படுத்தப்படாது என்றும் அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டியது அவசியமாகும்.

முன்னர் 8 சதவீத வரி இருந்தது. இதனுடன் இணைத்தே 2.5 சதவீத வரியை இணைக்க தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பில் அன்றே நாங்கள் விமர்சனங்களை முன்வைத்தோம். இந்த வரியை 2.5 சதவீதம் என்று கூறினாலும் 5 சதவீதமாவது அறவிடப்படும் என்றோம். இதனால் இதுவொரு குழப்பமான வரியே. 

இந்நிலையில் 8 சதவீதத்தில் இருந்த வற்வரி 12 சதவீதமாகி, பின்னர் 15 சதவீதமாகியது. இதனை தொடர்ந்து மீண்டும் 5 சதவீதம் அல்லது 7 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடப்படுகின்றது என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .