Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பான முழுமையான இராசாயன பகுப்பாய்வு அறிக்கை அடுத்த வாரம் ஒப்படைக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கையை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரதான மூன்று ஹோட்டல்கள், மட்டக்களப்பு புனிய சீயோன் ஆலயம் மற்றும் சாய்ந்தமருந்து பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான இராசாயன பகுப்பாய்வு அறிக்கைளை நீதிமன்றத்துக்கு வழங்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
குண்டு தாக்குதல் இடம்பெற்ற இடங்கள் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் 7 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago