Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 08 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி ஆவணங்களை தயாரித்து ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று தெரணியாகலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை பிரதேச குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வாகனம் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சந்தேக நபர்கள் போலி செஸி எண்கள், என்ஜின் எண்கள் மற்றும் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி ஜீப் வண்டியை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜீப் வண்டி ஏதேனும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அவிசாவளை பிரதேச குற்றவியல் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
20 May 2025