2025 ஜூலை 05, சனிக்கிழமை

'மலையக மக்களின் உழைப்புக்கேற்ற முன்னேற்றத்தை அரசாங்கத்தால் வழங்க முடியாது போனது'

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் இந்நாட்டுக்கு வழங்கிய பலத்துக்கு சமனான முன்னேற்றத்தை அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் வழங்க முடியாமல் போனதை ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன் நாட்டின் பிரதான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மலையக மக்கள் உள்வாங்கப்படவில்லை என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இன்று (7) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மலையகத்துக்கான புதிய அபிவிருத்தி அதிகாரசபை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முழு நாட்டையும் மய்யப்படுத்திய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தியில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டிருந்த மலையக மக்கள்  தமது வியர்வையையும், இரத்தத்தையும்,கண்ணீரையும்  சிந்தி பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலையை உலகளாவிய ரீதியில் எடுத்துச் சென்றாலும், அவர்களது வாழ்வு பின்தங்கியே காணப்படுகின்றது என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .