2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மஹிந்த போனால் போஷகர் பதவியும் போகும்

Thipaan   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு சமுகமளிக்காத கட்சி அமைப்பாளர்களை நீக்கி, அவர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

நீக்கப்படும் கட்சி அமைப்பாளர்களின் வெற்றிடங்களுக்கு, நேர்முகத் தேர்வில் தெரிவாகும் அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. பொது எதிரணியுடன் இணைந்து செயற்படுகின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் சகலரையும் நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, பொது எதிரணியின் மே தினக்கூட்டத்தில் பங்கேற்றால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவை நீக்கிவிடுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X