2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மஹிந்தவுக்கு அழைப்பு

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் தலைமைத்துவத்தில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, பேச்சுவார்த்தை ஒன்றுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

மக்களின் ஏகோபித்த அபிமானத்தைக் கருத்திற்கொண்டே, இந்தப் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், தற்போதைய அரசாங்கம் தொடர்பில், பொதுமக்கள் மத்தியில் பாரிய அதிருப்தி தோன்றியுள்ளது என்றார்.   

அத்துடன், இந்தப் புதிய கட்சியானது, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படும் என்றும் இக்கட்சியினூடாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பாரிய பொறுப்பொன்று கையளிக்கப்பட உள்ளதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .