2025 மே 17, சனிக்கிழமை

மஹிந்தவுக்கு முடியுமாயின், உங்களுக்கு ஏன் முடியாது

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அமர முடியுமாயின் முன்னாள் அமைச்சர்கள் பிரதியமைச்சர்களாக ஏன் செயலாற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார்.

இராஜங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கு நியமனங்களை வழங்கிவைத்துவிட்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தேசிய அரசாங்கம், ஐந்து வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும். இந்த ஆட்சியை சீர்குலைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் முற்கள் நிறைந்த பாதையில் பயணிக்கவேண்டியுள்ளது. அரசியல் பயணத்தில் பாரிய சவால்கள் இருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அவற்றுக்கு முகம்கொடுத்து உங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அழகான அரசியலை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .