Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசியல் கட்சி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை, வெலிகம பிரதேசத்தில், அன்றைய தினம் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தின் போதே, இக்கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மக்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை, முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கொண்டுள்ளார். ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும், இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தாமரை மலரின் மொட்டே, இந்தப் புதிய அரசியல் கட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனைக் குறிக்கும் வீடியோப் பதிவொன்று, பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மஹிந்த யாப்பா அபேவர்தன எம்.பி.யின் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
8 minute ago
18 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
57 minute ago
1 hours ago