2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

J.A. George   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகந்த அசேலபுர பகுதியில் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மா அரைக்கும் இயந்திரத்தில் வேலைசெய்துகொண்டிருந்த குறித்த பெண்ணின் கூந்தல் இயந்திரத்தில் சிக்கியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(30) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 40 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து வெலிகந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .