Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கு தற்போதும் சந்தர்ப்பம் உள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதற்கு தேவையான சட்டத்தை விரைவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என, அந்த நிலையத்தில் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.
அடுத்த வருடம் வரை காத்திருக்காமல், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில், அதற்கு முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலமொன்றை நாடாளுமன்றில் முன்வைத்து நிறைவேற்றிக்கொள்வதற்கு போதுமான காலம் உள்ளதாகவும் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago