2026 மே 09, சனிக்கிழமை

dd

மாகாண தேர்தல் மனுவை ஆராய 5 நீதியரசர்கள் குழாம் நியமனம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லைநிர்ணய அறிக்கை முன்வைக்கப்படாத நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான இயலுமைத் தொடர்பில், வியாக்கியானமொன்றை கேட்டு, ஜனாதிபதியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொருள்கோடல் மனுவை, ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம், முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், நீதியரசர்களான புவனெக அலுவிஹார, சிசிர டி அப்ரூ, பிரசன்ன ஜயவர்தன, விஜத் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள், நேற்று (15) நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இந்தப் பொருள்கோடல் மனு மீதான விசாரணை, ஓகஸ்ட் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறும், வியாக்கியானத்துடன் கூடிய தீர்ப்பு, ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த பொருள்கோடல் மனு தொடர்பிலான சட்டவிளக்கத்தை, எழுத்துமூல ஆவணமாக ஓகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர், உயர்நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் பதிவாளரினால், ஸ்ரீ லங்கா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “எல்லை நிர்ணய தொடர்பில் அறிக்கை இதுவரையிலும் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில், பழைய முறை​மையின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, சட்டரீதியில் இருக்கும் ஏற்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதியினால், உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில், மேற்குறிப்பட்ட காரணம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலமாக விளக்கத்தை முன்வைக்கமுடியுமென அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான எழுத்துமூலமான விளக்கங்களை, ஓகஸ்ட் 21ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர், உயர்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பிவைக்கப்படவேண்மென கோரப்பட்டுள்ளது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .