Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Nirshan Ramanujam / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மாகாணங்கள் இரண்டை ஒன்றிணைத்தல் அல்லது மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், இவற்றில் எதையென்றாலும், நாட்டு மக்கள் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே செய்ய முடியும்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“அதனைவிடுத்து, மாகாணங்களை ஒன்றிணைக்குமாறு பலவந்தமாகச் சென்று, நாடாளுமன்றத்தால் கூற முடியாது” என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படக்கூடாது என்பதுடன், மாகாணங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு இருத்தலும் கூடாது என்று
வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை பற்றிக் குறிப்பிட்டுப் பேசும் போதே, ரணில் விக்கிரமசிங்க மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.
அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. அதில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாட்டில் தற்போது 9 மாகாணங்கள் இருக்கின்றன. முழு நாட்டினதும் இணக்கமின்றி அதை பத்தாகவோ அல்லது எட்டாகவோ அல்லது பதினைந்தாகவோ ஆக்க முடியாது. நாட்டின் சகல மக்களும் இணங்கினால், எம்மால் அதை பதினைந்தாகவும் சரி அல்லது மூன்றாகவும் சரி எப்படியும் மாற்றியமைக்க முடியும். மக்கள் இணக்கம் தெரிவித்தால் நாம் அதை செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
“எனினும், அதை மக்களால் தான் முடிவு செய்ய முடியும். அதைவிடுத்து அதைச் செய்யுமாறு நாடாளுமன்றம் பலவந்தமாகச் சென்று கூற முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களையோ அல்லது சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களையோ ஒன்றிணைக்குமாறு நாம் சொல்ல முடியாது” என்று பிரதமர் விக்கிரமசிங்க இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025