2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

Janu   / 2025 நவம்பர் 16 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.   

பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நடமாடிக்கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவரிடமிருந்து ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் இருந்த சந்தேக நபர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு  நீண்ட காலமாக போதைப்பொருட்களை வழங்கி வருவதாகவும் வழியில் அவருக்காக காத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர்,  போதைப்பொருட்களை கொண்டு வந்து தருவதாகவும் தெரியவந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X