2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’மாணவர்களே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்’

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்கள் வீதியை கடப்பதால், கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


சகல பிரதான நகரங்களிலும் உள்நுழையும் பிரதான பாதைகளின் இருமருங்கிலும் பாடசாலைகள் காணப்படுவதாகவும் இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், சுரங்க வழி அல்லது சிறிய மேம்பாலங்களை அமைத்து இதன் மூலம் மாணவர்கள் வீதிகளை கடக்க நடவடிக்கை எடுப்பதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க முடியும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .