2025 மே 21, புதன்கிழமை

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கணித ஆசிரியர் கைது

Freelancer   / 2025 மார்ச் 08 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கணித ஆசிரியர் ஒருவர், பத்தாம் வகுப்பில் படிக்கும் எட்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திம்புலாகல கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ளது.

பெற்றோர்கள் பலமுறை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகார்களைத் தொடர்ந்து கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவிகள் ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட கணித ஆசிரியரை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X