2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாணவிக்கு கான்ஸ்டபிள் கொடுத்த காதல் கடிதம்

S.Renuka   / 2025 ஜூலை 10 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில வருடங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் 55 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், பாடசாலைக்கு பரீட்சை  எழுத வந்த மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தது மட்டுமல்லாமல், கூடவே ரோஜாப்பூ மற்றும் தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணையும் அந்த மாணவியிடம் கான்ஸ்டபிள் வழங்கியமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் ஜார்க்கண்ட்  மாநிலத்தின் சத்ரா மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. 

சத்ரா பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் 12ஆம் வகுப்பு பரீட்சை நடைபெற்ற போது, அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற கான்ஸ்டபிள் இந்த செயலை செய்துள்ளார். 

சுக்தேவ் மேத்தா என்ற அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பொலிஸ் காவலர், பாடசாலையில் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியை அணுகி அவருக்கு சிவப்பு நிற ரோஜாப்பூவுடன் ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார்.

 அந்தக் கடிதத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணையும் எழுதியுள்ளார். இதை படித்துப் பார்த்த அந்த மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவரங்கள் அனைத்தும் காவலர் மீது மாணவி கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்ததை ஜீரணிக்க முடியாமல் தவித்த மாணவி, பரீட்சையை பாதியிலேயே முடித்துவிட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகின்றது. மனமுடைந்த மாணவி பாடசாலையில் நடந்த சம்பவத்தை தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். 

உடனடியாக சிறுமியின் பெற்றோர் மாணவியை அழைத்துக்கொண்டு உள்ளூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, கான்ஸ்டபிளுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

 ஆனால், பொலிஸ் தரப்பில் இன்னும் முறையாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 

பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், அங்குதான் மேத்தா பணியில் இருந்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .