Editorial / 2019 ஜூலை 18 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மாத்தளைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.
மாத்தளை மாவட்டத்திலுள்ள விவசாய பண்ணைகளை கண்காணிப்பதற்காகவே, இவர்கள் மாத்தளைக்கு விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசுக்கள் 5 இலட்சம் ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், அவை வெவ்வேறு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், பாற்பண்ணை விவசாயிகள் சங்கத்தால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு செய்த முறைபாட்டையடுத்தே இவர்கள் அங்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.
மாத்தளை மாவட்டத்தின் இஹலவெல, கந்துருகஸ்யாய, மனன்வத்த ஆகிய பகுதிகளிலுள்ள விவசாய பண்ணைகளுக்கே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago