2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாபெரும் இளைஞர்கள் மாநாடு இலங்கையில்

Kamal   / 2019 ஜனவரி 23 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மாபெரும் இளைஞர்கள் மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது.

இம்மாநாடு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெறவுள்ளதென  தெரிவிக்கப்படுகிறது. 

 (AIESEC) இலங்கை அமைப்பின் தலைவர் இசுறு பிரேமதிலக்க உள்ளிட்ட நான்கு பிரதிநிதிகள்  அமைச்சர் சாகல ரத்னாயக்கவை அலரி மாளிகையில் நேற்று முன்தினம் (22) சந்தித்தது கலந்துரையாடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்  போது (AIESEC) ​அமைப்பின்  உத்தியோகப்பூர்வ இலட்சினையும் வெளியிடப்பட்டதுடன், சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இம்மகாநாடு வருடாந்தம் நடத்தப்படவுள்ளது.  

இளைஞர்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் , கலாச்சார வேறுப்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டல் மற்றும் பூகோள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே நோக்கமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .