2025 மே 09, வெள்ளிக்கிழமை

மாயமான தாஜ்மகால்

Mithuna   / 2023 டிசெம்பர் 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.

டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X