Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 13 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விமான விபத்து ஏற்படும் என்று விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஜோதிடரின் அந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் நேற்று மதியம் 1:39 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது.
இந்த விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. தீப்பிடித்து எரிந்த விமானத்தில் பயணித்த 230 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர். பல கனவுகளுடன் பயணித்த பயணிகளின் விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி காண்போரின் கண்களை கலங்கச் செய்து வருகிறது.
இதற்கிடையே, இந்த விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் துல்லியமாக கணித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago