Editorial / 2026 ஜனவரி 14 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

வறக்காபொல பொலிஸ் பிரிவின் ஹுனுவல பகுதியில் உள்ள ஒரு வயலில் செவ்வாய்க்கிழமை (13) மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியினர், வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து, வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹுனுவல, துலிஹிரிய பகுதியைச் சேர்ந்த 60 மற்றும் 58 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், வயலை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹுனுவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வறக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026