2025 மே 22, வியாழக்கிழமை

மின்னல் தாக்கத்தினால் ஒருவர் மரணம்

Janu   / 2025 மார்ச் 03 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் மோசமான வானிலை காரணமாக, மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் பலத்த மழை, மின்னல், பலத்த காற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்   அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியில் பெய்த கனமழை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், 177 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X