Freelancer / 2025 ஜனவரி 10 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார். (a)
27 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
52 minute ago