2026 மே 11, திங்கட்கிழமை

முக்கிய பிரமுகர்கள் நாளைய தினம் தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு நாளை அழைக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில், விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, நாளைய தினம் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி வருண ஜயசுந்தர, இந்தப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தரங்க பத்திரன ஆகியோர் நாளை அழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை காலை 9 மணயிளவில், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பெரும்பாலும் நாளைய தினம்  ஊடகங்கள் அனுமதிக்கப்படாதென்றும்,ஊடகங்களுக்கு குரல் பதிவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .