2026 மே 09, சனிக்கிழமை

முட்டாள் அமைச்சரா? சரத்துக்கு சந்தேகம்

Editorial   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென சரத் வீரசேகரவுக்கு அறிவுரை வழங்கிய, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் ஒருபோதும் இங்கு இனவாதம் பேசவில்லை. அவர்களின் மக்களுக்காக அவர்கள் பேசுகின்றனர். நாமும் அதைத்தானே பேசுகிறோம் எனத் தெரிவித்தார்.

'இனமொன்றை சார்ந்து பேசும் நபர்களை அரசியல் ரீதியில் தடைசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கும் அளவுக்கு அவர் முட்டாள் தனமான அமைச்சரா? என்றக் கேள்வி எழுகின்றது. கடந்த கால அனுபவங்களை மனதில் வைத்துகொண்டு மூவின மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்' என அறிவுரை கூறினார்.

 காடுகளை மீண்டும் வளர்த்தல் அமைச்சுக்கள் மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நேற்று (07) நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்வதானது, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு சமமானதாகும் எனத் தெரிவித்த பொன்சேகா, சம்பந்தனோ, சுமந்திரனோ இனவாதம் பேசவில்லைஇ தமிழ் மக்களின் நிலைப்பாட்டையே பேசுகின்றனர் அதனை விளங்கிக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் சரத் வீரகேசக வெறுமனே தெற்கு சிங்கள மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் அல்ல, வடக்கு கிழக்கு, தமிழ் முஸ்லிம் மக்களினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் சபையில் சுட்டிக்காட்டினார்.

இயற்கை வளங்களை பாதுகாப்பதில் பூட்டான் சிறந்த எடுத்துக்காட்டாக கூற முடியும். அந்த நாட்டில் 72 சதவீதம் காடுகளாக பராமரிக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாகவே எமது நாட்டில் பலர் உள்ளனர். எப்போது காட்டில் இடம் அபகரிப்பது, மிருகங்களை வேட்டையாடுவது என்றே சிந்தித்துக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், எனவே, இனியாவது இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் நடவடிக்கை வேண்டும் என்றார்.

அதேபோல் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யானை -மனித முரண்பாடுகளை காரணம் காட்டி யானைகளை கொலைசெய்யும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர், தான் அமைச்சராக இருந்த காலத்தில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். யானைகளை பாதுகாக்க வேலிகளை அமைத்து அழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

'நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்கள் முதலில் ஒழுக்க நெறியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஒழுக்கம் இல்லாதவர்கள் அதிகாரத்துக்கு வந்துள்ள காரணத்தினால் நாடும் ஒழுக்கமற்றதாகவே மாறும். அதேபோல் சிவில் நிருவாக அதிகாரிகள் யுத்தத்தை வெற்றிகொண்டதாக வெற்றியை தம்பக்கம் திருப்ப நினைகின்றனர்' என்றார்.

யுத்தம் குறித்து பேசுவதற்கு சரத் வீரசேகரவுக்கு எந்த தகுதியும் இல்லை. அதேபோல் யுத்தத்தை நடத்தும் வேளையில் ஜனாதிபதி தடையாக இருக்கவில்லை எனவும் சரத் வீரசேகர கூறினார் எனத் தெரிவித்த பொன்சேகா, 2009 ஜனவரி 31-பெப்ரவரி 1 ஆம் திகதிகளில் போர் நிறுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அறிவித்தார், ஆனால் அதற்கு நான் ஒருபோதும் இணங்கவே இல்லை. இந்த காலத்தில் எமது இராணுவம் பாரிய அளவில் பின்வாங்கினர்.

'அக்காலப்பகுதியில், விடுதலைப் புலிகளில் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர். இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். சரத் வீரகேசரவின் நியமனம் குறித்து தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய செயலாளர் என்னுடனே கதைத்தார். கரன்னாகொட இதற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்த போதும் நானே அவருக்கான உதவிகளை செய்தேன்' என்றார்.

யுத்த வெற்றி அரசியல் வாதிகளுக்கு செல்ல வேண்டுமென கூறுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். யுத்த வெற்றி இராணுவத்தை மாத்திரமே

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .