Editorial / 2019 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையை தயார் செய்ய முடியும் என, எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளைய தினம் மீண்டும் கூடவுள்ளது.
இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்னாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சாட்சியம் அளிக்கவுள்ளனர்.
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நாளைய நடவடிக்கை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் என, தெரிவுக்குழுவின் தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
18 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
09 May 2026